2025 மே 08, வியாழக்கிழமை

பரவிப்பாஞ்சானில் காணி விடுவிப்பு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பகுதி காணி, இன்று (12) விடுவிக்கப்பட்டது.

யுத்த காலத்தில் இராணுவத்தின் வசம் இருந்த காணிகள், 2010ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்பட்ட நிலையில், இக்காணி தொடர்ந்தும் இராணுவத்தின் வசம் இருந்தது.

இந்நிலையில்,  அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி இராணுவத் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்ர ரணசிங்கவிடம் காணி உரிமையாளர் விடுத்த கோரிக்கைக்கு   அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பெயரில், காணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

57ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.ஆர்.பி ஜெயவர்த்தனவினால் குறித்த காணி, கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்த காணி உரிமையாளரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் காணியை, உரிமையாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X