2025 ஜூலை 16, புதன்கிழமை

பல நோக்குக் கூட்டுறவுச்சங்கம் செயலிழப்பு: பணியாளர்கள் நிர்க்கதி

George   / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பகுதியில் மக்களுக்கான சேவையை வழங்கி வந்த பனங்காமம்பற்று பல நோக்குக் கூட்டுறவுச்சங்கம் தற்போது செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இயங்கி வந்த பனங்காமம் பற்று பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம், கடந்த யுத்த காலத்திலும் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் பொருட்களை பகிர்ந்தளிப்பதிலும் நியாய விலைகளில் பொருட்களை வழங்குவதிலும் சிறப்பாக செயற்பட்டு வந்த நிலையில், இன்று குறித்த சங்கம் செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது,

அரிசியாலை, எண்ணை உற்பத்தி நிலையம், சிறுகைத்தொழில் உற்பத்தி நிலையம் என்பவற்றை கொண்டு 15துக்கும் மேற்பட்ட கிளை நிலையங்கள் இயங்கிய நிலையில், யுத்தத்தினால் இதன் சொத்துக்கள் அழிந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர் ஒரு வருடகாலமாக மெனிக்பாம் பகுதியில் ஏழு வரையான நலன்புரி நிலையங்களில் குறித்த நிலையங்கள் இயங்கி வந்ததுடன், அதிக வருமானத்தையும் பெற்றுக் கொண்டன.

இருப்பினும் தற்போது, குறித்த பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் செயலிழந்த நிலையில் கூட்டுறவுக்காக உழைத்த பல பணியாளர்கள் தற்போது எந்த ஒரு வேலை வாய்ப்புக்களும் இன்றி நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X