2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பலநோக்குகூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான காணி கையளிப்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி ஏ-35 வீதி கோரக்கன் கட்டுப்பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த கரைச்சி வடக்கு பலநோக்குகூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான காணி உரிய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருவதால் அதன் உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் கணிசமான நிலங்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், கிளிநொச்சி ஏ-35 வீதி கோரக்கன் கட்டுப்பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த பலநோக்குகூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான மூன்று ஏக்கர் காணி மற்றும் அரிசியாலைக்கு சொந்தமான கட்டடங்கள் உரிய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த காணி கட்டடங்கள் கரைச்சி வடக்கு பலநோக்குகூட்டுறவுச் சங்க பணியாளர்களால் இன்று சனிக்கிழமை (13) துப்பரவு செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .