2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பளையில் இராணுவத்தின் பொருள்கள் மீட்பு

Editorial   / 2020 ஜூன் 16 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோப்பளை காற்றாலை அமைந்துள்ள பகுதியில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணியைத் துப்புரவு செய்த போது, சில இராணுவ பொருள்களும் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டதைச் சேர்ந்த நபர் ஒருவரின் தேசிய  அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், இராணுவத்தால் விடுமுறைக்குச் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி சிட்டை, இராணுவம் தண்ணீர் கொண்டு செல்லும் போத்தல், நெஞ்சு கவசம், 3 கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .