2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பஸ் சாரதியின் நேர்மையான நடவடிக்கை

Niroshini   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்ட தாலிக்கொடி உட்பட வங்கி ஆவணங்கள் சிலவற்றை, இன்று (14), தனியார் உரிமையாளர் சங்கத்தின் பணிமனையில் வைத்து, பஸ் சங்கத்தின் தலைவர் சு.இராஜேஸ்வரினால் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றைய தினம் (13), வவுனியா மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட ND- 7038 இலக்கமுடைய பஸ்ஸில் பயணம் மேற்கொண்ட கிளிநொச்சி நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர், பஸ்ஸில் இருந்து இறங்கும்போது, தவறுதலாக தனது கைப்பை ஒன்றினை தவறவிட்டு இறங்கியுள்ளார்.

அதனை பார்வையிட்ட தனியார் பஸ் சாரதியும் உரிமையாளருமான கே.ஜீவானந்தபவனினால் , பஸ்ஸில் கைவிடப்பட்ட குறித்த கைப்பை வவுனியா மாவட்ட பஸ் சங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது.

 கைப்பையில் காணப்பட்ட அடையாள அட்டை ஆவணத்தின் முகவரிக்கு குறித்த உரிமையாளருடன் தொடர்புகொண்டு, அவர் பஸ்ஸில் தவறவிட்ட ஐந்து பவுண் தாலிக்கொடி மற்றும் மூன்று வங்கி புத்தகம் என்பவற்றை உரிமையாளரூடாக உறுதிப்படுத்திய பின்னர், இன்றைய தினம் (14), வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் அலுவலகத்தில் வைத்து, தலைவரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது . 

தவறவிட்ட தங்க நகை உட்பட ஆவணங்கள் திரும்ப ஒப்படைத்த பஸ் சாரதியின் நேர்மையான நடவடிக்கை தங்க நகைகளை பறிகொடுத்தவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .