2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

பஸ் - பால் பவுசருடன் மோதி விபத்து ; 24 பேர் காயம்

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 30 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, ஒமந்தை, ஏ9 வீதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று, பால் பவுஸருடன் மோதி விபத்துக்குள்ளானதில், 24 பேர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து, இன்று (30) காலை 6.10 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா - இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ், ஓமந்தை - பன்றிக்கெய்த குளம் பகுதியில் வைத்து, எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த பால் பவுஸருடன் மோதி, விபத்துக்குள்ளானது.

இதனால் குறித்த பஸ்ஸில் பயணித்த 24 பேர் காயமடைந்து, வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை, ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை, கடந்த 5 நாட்களுக்கு முன்னர்,  ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றி வந்த பஸ் ஒன்று தாண்டிக்குளத்தில் வைத்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயமடைந்நிருந்தனர். மேலும், ஒரு மாதத்துக்கு முன்னரும், புளியங்குளத்தில் வைத்து இவ்வாறு விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .