2025 மே 22, வியாழக்கிழமை

பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன் 

கிளிநொச்சி பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு இன்றைய அதிபர்களுடனான கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் 29ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள  நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கூட்டம், இன்று (26) கிளிநொச்சியில் இடம்பெற்றது. 

இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் பாடசாலைகளிலும், ஏ9 மற்றும் ஏ32 வீதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு  பொலிஸ் பாதுகாப்பு வழங்குவது என்றும் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, சுற்றுக்காவல் நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுப்பவடுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதுகில் காவுகின்ற புத்தக பைகளை மாணவர்கள் பாடசாலைகளுக்கு கொண்டுவருவதைத் தற்காலிகமாக நிறுத்துமாறும், பாடசாலைகளில் காலை பிரார்த்தனைகளை வழமையாக மேற்கொள்வது போன்று மேற்கொள்ளாது வகுப்பறைகளை மேற்கொள்வதற்கும் பாடசாலை நேரங்களில் பெற்றோர் உட்பட எவரும் பாடசாலை வளாகத்துக்குள் செல்ல முடியாது என்றும், அத்தோடு பாடசாலை விடுகின்ற போது ஒரே நேரத்தில் மாணவர்களை வெளியில்விடாது வகுப்பு வகுப்பாக வெளியில் விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநாச்சி மாவட்டத்தில், 104 பாடசாலைகளில் 32,800 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பாடசாலைகள் திறந்து விடப்பட்டதன் பின்னர் மாணவர்கள் அச்சமின்றி கல்வியை தொடரும் வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X