2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’பாடசாலைகள் நாளை திறக்கப்படும்’

Niroshini   / 2021 ஜனவரி 11 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

உப்புக்குளம் கிராமத்தை அண்மித்த மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மற்றும் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளும், நாளை (12) மீண்டும் வழமை போல் இயங்குமென்று, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில், இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், எருக்கலம்பிட்டி கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 113 நபர்களில், 70 மாணவர்கள் உள்ளடங்குவதாகவும், அவர்கள்,  அடுத்த வாரம் பாடசாலைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .