Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 09 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மல்லாகம் நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக்கிணறுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு, மல்லாகம் நீதவான் ஏ.யூட்சன், நேற்று (08) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அச்சுவேலி பொலிஸ் பிரதேசத்துக்கு உட்பட்ட புத்தூர் பகுதியில், சனிக்கிழமை (06) பட்டம் ஏற்றிய சிறுவன் தவறுதலாக வயல் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மல்லாகம் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்தனர். இதன்போதே பொலிஸாருக்கு நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
அதாவது, மல்லாகம் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட அனைத்து பொதுச்சுகாதார பரிசோதகர்களும் பாதுகாப்பற்ற கிணறுகளை அவதானித்து, அதன் உரிமையாளர்கள் மூலம் உயரமான கட்டுகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.
அத்துடன், பாதுகாப்பற்ற கிணறுகளால் கடந்த காலங்களில் பல்வேறு சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமையை சுட்டிக்காட்டிய நீதவான், இது தொடர்பில் தான் பல்வேறு முறை பொலிஸ் பொறுப்பதிகாரிளுக்கு சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.
இவ்விடயத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அக்கறையுடன் செயற்படவேண்டும் எனவும் நீதவான் தெரிவித்தார்.
15 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago