Niroshini / 2021 நவம்பர் 10 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
வவுனியா - புதிய கற்பகபுரம் வீதிக்கு கார்பட் வீதியாக அமைக்கப்பட்ட ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினரின் விளம்பரப் பெயர்ப்பலகை, நேற்று (09) இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினரின் பம்பைமடு இணைப்பாளரால் பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி, புதிய கற்பகபுரம் வீதி கார்பட் வீதியாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே . காதர் மஸ்தானின் அபிவிருத்தி நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்டுள்ளது .
இரு தினங்களின் பின்னர் நேற்று அவ்வீதிக்கு அமைக்கப்பட்ட விளம்பரப் பெயர்ப்பலகை விசமிகளால் சேதமாக்கப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினரின் புகைப்படம் கிளித்தெறியப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களுடன் அப்பகுதியிலுள்ள சிலர் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இணைப்பாளர் திருமதி மில்டன் ரமேஸ் ஜெயமாதுரியினால், பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
எனினும், முறைப்பாட்டுக்கான மூலப் பிரதி முறைப்பாடு மேற்கொண்டவருக்கு வழங்கப்படவில்லை என்றும், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
26 minute ago
39 minute ago
10 Nov 2025