Editorial / 2022 ஜனவரி 06 , மு.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில் கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
ஜனவரி 4ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்ட காணியில், வேலி அமைப்பதற்காக, சென்றிருந்த நபர், பாரிய குண்டுகளை கண்டுள்ளார். அதனை இரும்புக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட போதே கைவேலி பகுதியைச் சேர்ந்த, அறுவர் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோக்கிராம் நிறை கொண்டது.
கைது செய்யப்பட்ட அறுவரையும் மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (05) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago