Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூன் 29 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
வடக்கில், கடலட்டை வளர்ப்பதற்கு, கடந்த நல்லாட்சி அரசாங்கமே, சீன நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அத்துடன், கௌதாரிமுனை பகுதிக்கு நேரில் வந்து நிலைமைகளை ஆராய்ந்தன் பின்னரே, தன்னால் இது குறித்து முடிவெடுக்க முடியுமென்றும், அவர் கூறினார்.
பூநகரி, கௌதாரிமுனை பகுதியில், சீன நிறுவனமொன்று சட்டவிரோதமாக கடலட்டை வளர்ப்பதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில், வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த நல்லாட்சி காலத்தில், அரியாலையில், சீன நிறுவனமொன்றுக்கு கடலட்டை வளர்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகவும் இதன் ஒரு பிரிவுதான் தற்போது கௌதாரிமுனையில் இயங்கி வருகிறதெனவும் கூறினார்.
சீன நிறுவனத்துடனான உடன்படிக்கையில், கௌதாரிமுனை மீனவர்கள் கையொப்பம் இட்டிருக்காவிட்டாலும், அவர்களுக்கு சீன நிறுவனம் தனிப்பட்ட ரீதியில் எதுவுதும் வழங்கியதா என்பது குறித்து தெரியாதெனவும், அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விவகாரத்தில், குழப்பமொன்று உள்ளதாகத் தெரிவித்த டக்ளஸ், இந்த கிழமைக்குள் தான் அங்கு வந்து நிலைமைகளை நேரில் பார்த்த பின்னரே, தன்னால், இது குறித்து முடிவெடுக்க முடியுமெனவும் கூறினார்.
‘கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கங்களின் ஒத்துழைப்பில்லாமல் இங்கு கடலட்டை பண்ணையை ஆரம்பித்திருக்க முடியாது. பக்கத்து கிராம மக்களே, இந்த பகுதி மக்களின் அனுமதியில்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில், இந்த பண்ணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதென்றால், இந்தப் பகுதி கடற்றொழிலாளர் சங்கத்தினரதோ அல்லது அதன் ஒரு பகுதியினரதோ ஏதோவொரு விதமான அங்கிகாரம் வழங்கியிருந்திருக்க வேண்டும்' என்றும், அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago