Editorial / 2022 ஜனவரி 04 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர், பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், முல்லைத்தீவு பொலிஸாரால் டிசெம்பர் 24ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார்.
பாடசாலை மாணவிகள் மற்றும் சிறுமிகள் மீது ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டமை தொடர்பில், சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், முல்லைத்தீவு பொலிஸாரால் குறித்த ஆசிரியர், அன்றையதினம் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் மறுநாள் (25) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, இன்று (04) வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அந்த வழக்கு, முல்லைத்தீவு நீதிபதி முன்னிலையில், நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேநகபரான ஆசிரியரின் விளக்கமறியல், ஜனவரி 18ஆம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago