Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 ஜூலை 27 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர், வவுனியா பழைய பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிவோர் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பகுதியில் நின்றிருந்த பாலியல் தொழிலாளி ஒருவரிடமும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அதன் முடிவுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆயினும், குறித்த பெண் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸாரின் உதவியுடன், இன்று (27) கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago