2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பாவக்குளத்தில் சிறுமி துஷ்பிரயோகம்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – பாவக்குளம் பகுதியில், 16 வயது சிறுமியொருவரை, பாடசாலையொன்றின் அதிபர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக, செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காக்கையன்குளத்தில் உள்ள பாடசாலையொன்றில் அதிபராக கடமையாற்றும் நபரொருவரே, அதே கிராமத்தில் வசிக்கும் தாய் தந்தையை பிரிந்து வாழும் 16 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என, பொலிஸார் கூறினர்.

குறித்த நபர், அச்சிறுமியை தனது வீட்டில் தங்க வைத்துள்ளர். இந்நிலையில் சிறுமி மீது அதிபரினால் பாலியல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக அயலவர்களினால் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள் குழு குறித்த கிராமத்துக்குச் சென்று சிறுமியுடன் கலந்துரையாடிதன் அடிப்படையில், சிறுமி 15 வயதில் இருந்து உடல் ரீதியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர், செட்டிகுளம் பொலிஸாரின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் சிறுமியை ஒப்படைத்துள்ளனர்.

இதன் பிரகாரம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் தமது தரப்பு வாக்குமூலத்தினை பொலிஸாருக்கு வழங்கியதையடுத்து, சிறுமியிடம் செட்டிகுளம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரான அதிபரை பொலிஸார் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .