2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

‘பிசிஆர் இல்லையேல் உள்ளே செல்ல முடியாது’

Niroshini   / 2021 ஜனவரி 07 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களில் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்பட்டவர்கள் மாத்திரமே, பாடசாலைகளுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என, வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி. திலீபன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மேற்படி கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள், அதிபர்களுக்கு புளியங்குளம் இந்துக் கல்லூரியில், கடந்த இரு தினங்களாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் எனினும், இப்பரிசோதனைகளில், குறைந்தளவான அதிபர்கள், ஆசிரியர்களே கலந்துகொண்டனர் எனவும் கூறினார்.

இப்பரிசோதனை வெளிமாவட்டத்திலிருந்து வரும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கே மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவித்த அவர், வெளிமாவட்டங்களிலிருந்து 150 ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக வருகின்ற போதிலும், நேற்றைய பரிசோதனைக்காக 34 ஆசிரியர்களே வருகை தந்திருந்தார்கள் எனவும் கூறினார்.

நாளைய தினமும் (08) குறித்த பரிசோதனை இடம்பெறவுள்ளதால், வெளி மாவட்டத்திலிருந்து வருகை தராதவர்களும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், தவறாது அனைவரும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும், அவர் அறிவுறுத்தினார்.

பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்டு, கொரோனா தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்ட பரிசோதனை  அறிக்கையை வைத்திருப்பவர்கள் மாத்திரமே, பாடசாலைகளுக்குள் சென்று, கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும், திலீபன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .