2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பிரான்ஸூக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் பெலராஸில் சடலமாக மீட்பு

Editorial   / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

பிரான்ஸூக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி சென்ற கிளிநொச்சி
வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த  ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில்
சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் (வயது 40) ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பி விமானம்
மூலம் ரஷ்யா சென்று அங்கிருந்து பெலராஸ்,போலந்து,ஜேர்மன் ஊடாக பிரான்ஸ்
செல்வதற்காக பெலராஸிலிருந்து போலந்துக்கு சுமார் 700 கிலோ மீற்றர்
தூரத்தை நடந்து கடப்பதற்காக  ஏழு பேர் கொண்ட குழுவுடன் சென்ற போது உடல்
நிலை பாதிக்கப்பட்டு பெலராஸ் எல்லையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. ஏனையவர்கள் இவரை விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 7 ஆம் திகதி சனிக் கிழமை பெலராஸ்  எல்லையில் இருந்து சில கிலோ
மீற்றர்  தொலைவில்  உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில்  வட்டக்கச்சியில்
உள்ள மனைவியை தொடர்பு கொண்டு தன்னால் நடக்க முடியாதுள்ளது என்றும் தன்னை யாரேனும் காப்பாற்றினால் அன்றி  உயிர் தப்ப வேறு வழியில்லை என்றும்
தெரிவித்தாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அதுவே  அவர் இறுதியாக தொடர்பு
கொண்டு பேசியது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X