Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-விஜயரத்தினம் சரவணன்
முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வருடம் நடைபெறவுள்ளது.
இதற்கமைய, மார்ச் மாதம் 10ஆம் திகதியன்று, மாவட்டக் கடற்றொழிலாளர் சம்மேளனத்துக்கான புதிய நிர்வாகத் தெரிவை மேற்கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழிலை முற்றாகத் தடைசெய்யக் கோரி, 2018ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கால், குறித்த நிர்வாகமானது, மூன்று வருடங்களுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாமலேயே இருந்து வந்தது.
தற்போது நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் மீதான வழக்கு விசாரணைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள அதேவேளை, மாவட்டத்துக்குப் புதிய கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளரும் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், புதிய கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகத் தெரிவைச் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
2 hours ago