Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
கடந்த நாள்களில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன், பி.சி.ஆர் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன எனத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.கெங்காதீஸ்வரன், ஆபத்தான கட்டத்தை நோக்கி புதுக்குடியிருப்பு செல்வதாகவும் கூறினார்.
அத்துடன், ஒரு சிலரது அசமந்தப்போக்கால் புதுக்குடியிருப்பு பிரதேசமே முற்றாக பாதிப்படையும் நிலைமை ஏற்படலாமெனவும் நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகுமானால், எவரையும் வைத்தியர்களால் காப்பாற்ற முடியாமல் போய்விடும் எனவும், அவர் எச்சரித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், புதுக்குடியிருப்பில், தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாகவும் இது கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக பலரின் உடல் நிலை தொடர்பில் வெளியான பெறுபேறாகாவே பார்க்க வேண்டியுள்ளதெனவும் கூறினார்.
இன்றும் பலர் அறிகுறிகளுடன் வீடுகளுக்குள் இருப்பதாகத் தெரிவித்த அவர், இவர்கன் அனைவரும் வைத்தியசாலையில் நாட வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.
வடமாகாணத்தில், அதிகளவாக கொரோனா தொற்றும் பிரதேசமாக புதுக்குடியிருப்பு பிரதேசம் மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த புதன்கிழமை (25) 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில். 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலைமை தொடருமானால், குறுகிய காலத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசம் கொரோனா தொற்றால் மோசமான நிலைமை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும், அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஆகவே, தொடர்ந்து வரும் நாட்களில் குறைந்தது இரண்டு வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது அவசியம் என்றும், எம்.கெங்காதீஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .