Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
புதுக்குடியிருப்பில், கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மரக்கறி இறக்குமதி வியாபாரியுடன் தொடர்புடைய 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த நபருடன் நேரிடியாகத் தொடர்பை பேணிய 65 பேரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 129 பேருமாக, மொத்தமாக 194 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அறியமுடிகிறது.
அத்துடன், இவர் தம்புள்ள பகுதிக்குச் சென்று, மரக்கறிகளைப் பெற்று வந்து, புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு, விசுவமடு சந்தை வியாபாரிகளுக்கு வழங்குபவர் என, முதல்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன், சனிக்கிழமை (26) மாலை பிசிஆர் முடிவுகள் கிடைக்கும் வரை குறித்த நபர் சமூகத்தில் நடமாடியுள்ளார். இதனால் புதுக்குடியிருப்பு பகுதி அபாய வலயமாகுமா என்று, மக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளது.
இவர் தற்போது, கிளிநொச்சி - கிருஷ்ணாபுரத்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
18 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
2 hours ago