Niroshini / 2021 நவம்பர் 11 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
அதிகரித்துள்ள விலையேற்றத்தை கண்டித்து, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் பிரதேச அரசியல்வாதிகள் பொதுமக்கள் இணைந்து, இன்று (11) காலை, கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்
இன்று காலை 9 மணிக்கு, புதுக்குடியிருப்பு நகரப் பகுதியில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, புதுக்குடியிருப்பு பிரதேச சபை வரை சென்றது.
இதன்போது, புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் மாட்டு வண்டிலில் அதிகரித்த விலைக்குரிய பொருள்கள் சிலவற்றை ஏற்றியவாறும் பேரணியாகச் சென்றனர்.
நாட்டில் அதிகரித்துள்ள கேஸ், சீனி, சீமெந்து உள்ளிட்ட பொருள்களின் விலையேற்றத்துக்கு எதிராகவும் விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு எதிராகவும் குறித்த கவனயீரப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது
பேரணியாகச் சென்றவர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரிடம், மகஜர் ஒன்றையும் கையளித்தனர்
இதேவேளை, போராட்டத்தை ஏற்பாடு செய்த பிரதேச சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கமைய, புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் உள்ள வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி, குறித்த போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago