Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
தாற்சுகான் இசின்ரியூ கராத்தே ஆசிரியர் வி.தனுஸ் அவர்களின் பயிற்சியின் கீழ் உள்ள மாணவர்களின் தற்காப்பு கலையின் வீர சாகச நிகழ்வு, சனிக்கிழமை (01), புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அதில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த மாஸ்டர் கியோசி.சி.சிவபாலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந், உப தவிசாளர் க.ஜனமேஐயந், பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன், முல்லைத்தீவு மாவட்ட சோட்டோக்கான் கராத்தே தலைவர் கா.நாகேந்திரன், அகிலஇலங்கை சமாதான நீதவானும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவருமான த.நவநீதன், சமூக செயற்பாட்டாளர் முல்லை ஈசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கராத்தே சாகச நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான தரப்பட்டிகள் மற்றும் சான்றிதழ்கள், நினைவு சின்னங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025