Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், கொரோனா தொற்று மீண்டும் மிக வேகமாக பரவிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.கெங்காதீஸ்வரன், எனவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கடந்த ஒரு வாரத்தில், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மாத்திரம், 145 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரெனவும் சமுதாயத்தில் நிறைய கொரோனா தொற்றாளர்கள் காணப்படுகின்றார்கள் எனவும் கூறினார்.
இதில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.
"நாட்டில், கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், சுகாதார துறைக்கு தெரியாமல், கோவிலில் பூஜை, பிறந்தநாள் கொண்டாட்டம், திருமணம், மஞ்சல்நீராட்டு விழா என பல நிகழ்வுகள், பல இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
எங்களால் எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் கண்காணிக்கமுடியாது. இது பொதுமக்களின் கவனமின்மையை வெளிக்காட்டி நிற்கின்றது" என்றும், எம்.கெங்காதீஸ்வரன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .