2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

புனரமைப்பு பணிகளுக்காக கம்பரலிய திட்டத்தின் கீழ் 4 மில்.ரூபாய் நிதி

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு துணுக்காய் உயிரங்குளத்தின் சேதமடைந்துள்ள அணைக்கட்டு புனரமைப்பதற்கு கம்பரலிய திட்டத்தின்கீழ், 4 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக துணுக்காய் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, துணுக்காய் கமநலசேவை நிலையத்தின்கீழ் உள்ள உயிலங்குளத்தின் அணைக்கட்டு கடந்த மே மாதம் பெய்த மழை காரணமாக சேதமடைந்த நிலையில், பிரதேச விவசாயிகள் இராணுத்தினர் கநமலசேவை நிலையம் பிரதேச செயலகத்தினர் என இணைந்து குளத்தின் அணைக்கட்டினை தற்காலிகமாக சீர் செய்துள்ளனர்.

இந்நிலையில் துணுக்காய் உயிலங்குளம் தென்னியன்குளம் கோட்டைகட்டியகுளம் ஆகிய பகுதிகளுக்கான பிரதான பாதையாகவும் உயிலங்குளம் அணைக்கட்டுப்பகுதியே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனால் எதிர்வரும் காலத்தில் மழை பெய்யுமாக இருந்தால் அணைக்கட்டு சேதமடைந்து போக்கு வரத்துக்கள் துண்டிக்கப்படும் அபாயநிலை காணப்படுவதாகவும், குறித்த அணைக்கட்டு புனரமைக்கப்படவேண்டும் என்றும் பிரதேச விவசாயிகள் பொதுமக்கள் அண்மையில் நடைபெற்ற துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் இன்று (19) துணுக்காய் பிரதேச செயலரை தொடர்புகொண்டு இது தொடர்பில் வினாவிய போது துணுக்காய் உயிலங்குளததின் அணைக்கட்டு உடனடியாக புனரமைக்க வேண்டிய தேவையுள்ளது.

இதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கம்பரலிய திட்டத்தின் கீழ் எமது பிரதேசத்திற்கு கிடைத்துள் 20 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின்கீழ், 4 மில்லியன் ரூபாய் நிதி உயிலங்குளத்தின் அணைக்கட்டினை புனரமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது,

இதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றவுடன் புனரமைப்புப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்வாறு கம்பரலிய திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற 20 மில்லியன் ரூபாய் நிதியில்நான்கு மில்லியன் ரூபாய் உயிலங்குளத்தின் அணைக்கட்டு புனரமைப்பதற்கும் ஏனையவை ஆலயங்கள் புனரமைப்பு முன்பள்ளிஅபிவிருத்தி வீதிகள் புனரமைப்பு போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .