Editorial / 2019 மார்ச் 25 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலைப் பகுதியில் உள்ள புளியமுனை பகுதியில், நீண்ட காலத்துக்குப் பின்னர் புகுந்து கொண்ட யானைகள், தற்காலிக வீடு ஒன்றும் மற்றும் பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளன. இதனால் இலட்சக்கணக்கான விவசாய பயிர்கள் அழிநடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதுடன், நீண்டகால வான் பயிர்களை அழித்துவருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காட்டு யானைகளை கட்டுப்படுத்த, யானை வேலி அமைத்துதருமாறு பல்வேறு கிராம விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
18 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
42 minute ago