Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவின் பிரதான குளங்களில் ஒன்றான குடியிருப்பு குளத்தில், ஹொரவொப்பத்தான வீதியோரமாக மண் நிரப்பி பூங்கா அமைத்துள்ளமை தொடர்பில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரொருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை விண்ணப்பித்துள்ளார்.
வவுனியா நகரசபையால் வவுனியா குளத்தின் நீரேந்து பிரதேசத்தில், கிரவல் மண் கொட்டப்பட்டு, அப்பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றது.
குளங்களை மூடி கட்டடங்கள் அமைக்கப்பட்டு வருவதாக, விவசாய திணைக்களத்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரச திணைக்களமொன்று அரச அதிகாரிகளை உள்ளடக்கி, குளத்தின் நீரேந்து பிரதேசத்தை மூடி, பூங்கா அமைக்கப்படுவது தொடர்பில், சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் தெரிவித்ததுடன், இக்குளத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகளும் கவலை வெளியிட்டு வந்திருந்தனர்.
எனினும், குறித்த குளம் பாரிய நீர்ப்பாசனக்குளம் என்பதால் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ளடங்குவதாகவும் எனவே, இந்தத் திணைக்களமும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளவர் தெரிவித்தார்.
இதேவேளை, குளமொன்றின் நீர்வரத்து பகுதி மற்றும் நீரேந்து பிரதேசத்தை மூடுவதனால் நாளடைவில் வவுனியா நகர மத்தியில் பல ஏக்கர் விவசாய நிலத்தை கொண்டமைந்துள்ள குளம் மூடப்படும் அபாயம் ஏற்படும் எனவும் நகரசபை இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவதானது மக்களுக்கு பிழையான முன்னுதாரணமாக காணப்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இது தொடர்பில் தகவல் கோரி நகரசபை, நீர்ப்பாசன திணைக்களம், சுற்றாடல் அதிகாரசபை உட்பட்ட திணைக்களங்களுக்குத் தகவல் அறியும் உரிமை சட்டத்தால் தகவல் கோரப்பட்டுள்ளதுடன், வவுனியா மாவட்டச் செயலாளர், கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், விவசாய அமைச்சுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் செயற்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லவுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.
33 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago