Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள பிரதேசமாக பூநகரி காணப்படுகிறது. எனவே, இது தொடர்பான புள்ளிவிபரத் தகவல்களை பெறுவதற்காக பூநகரி பிரதேச செயலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு நேற்று (19) தகவல்களை வழங்க முடியாது என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பூநகரி பிரதேச செயலக பிரிவில் எத்தனை கிராமங்களில் எவ்வளவு மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் மாத்திரமே கோருவதற்கு சென்ற ஊடகவியலாளர்களுக்கு, இன்று பொதுமக்கள் தினம் என்பதனால் தகவல்கள் வழங்க முடியாது என்று தனது அலுவலக உதவியாலளர் மூலம் பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த தகவல்கள் ஏற்கனவே தயார் நிலையில் பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவில் காணப்படுவது வழக்கமாகும். இதனை வழங்குவதற்கு சில நிமிடங்கள் போதுமானது இருந்தும் குறித்த தகவல்களை பிரதேச செயலாளர் வழங்க மறுத்ததாகத் தெரிவித்தனர்.
16 minute ago
48 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
58 minute ago
2 hours ago