2025 மே 10, சனிக்கிழமை

பெண் சடலமாக மீட்பு: இருவர் கைது

Niroshini   / 2021 ஜூன் 22 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - அம்பாள் குளத்திலிருந்து, மார்ச் மாதம்  சடலமாக மீட்கப்பட்ட உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர், நேற்று (21) கிளிநொச்சி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், 24, 41 வயதுகளையுடையவர்கள் எனவும் இவர்கள், கிளிநொச்சி - முறிப்பு பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

மார்ச் 9ஆம் திகதியன்று, அம்பாள்குளத்தில் இருந்து, 37 வயதான காமராஜ் திலகேஸ்வரி என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த பெண்ணுக்கு, 03 வயதில் குழந்தையொன்றும் இருப்பதாக, ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.

இது தொடர்பில் விசாரணைகைளை முன்னெடுத்து வந்த கிளிநொச்சி பொலிஸார், சந்தேகத்தின் பேரில், குறித்த இருவரையும் கைதுசெய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X