2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பெண் சடலம் மீட்பு: கழுத்து நெரிக்கப்பட்டே கொலைசெய்யப்பட்டார்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன்   

கிளிநொச்சியில்  சடலமாக மீட்கப்பட்டப் பெண், கழுத்து நெரிக்கப்பட்டே கொலைச் செய்யப்பட்டுள்ளதாக, உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

அத்துடன், குறித்த பெண் ஐந்து மாதக் கர்ப்பிணி எனவும் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில்,  கொலை செய்யப்பட்ட அன்று அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடது புற கண்ணுக்கு மேற்பகுதியில்  குத்தப்பட்ட உட்காயம் ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூறுப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், இறுதிக் கிரிணைகளுக்காக, அவரது சடலம் தந்தையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X