2025 ஓகஸ்ட் 08, வெள்ளிக்கிழமை

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் பயிற்சி நெறி

Editorial   / 2017 ஜூலை 04 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார், எஸ்.என். நிபோஜன்

கிளிநொச்சி மாவட்டத்தில், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பற்றிக் சாயமிடும் பயிற்சி நெறி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில், மேலதிக மாவட்டச் செயலரும் மேற்படி நிலையத்தின் உதவிப்பணிப்பாளருமாகிய த.பிருந்தாகரன் தலைமையில், நேற்று (03) இடம்பெற்றது.

மகளிர் அபிவிருத்தி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் கிளிநொச்சி மாவட்ட செயலக ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சுயதொழில் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பற்றிக் சாயம் இடும் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா 5,000 ரூபாய் பெறுமதியான மூலப்பொருட்களும் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய நிலையத்தில், தொடர்ச்சியாக தமது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் இவர்களுக்குரிய மேலதிக பயிற்சிகள், தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .