2025 மே 21, புதன்கிழமை

பெரிய வெங்காயப் பயிற்செய்கையில் சாதனை

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

கடந்த சில ஆண்டுகளாக வானிலை சீர்கேடு காரணமாக விவசாய உற்பத்திப் பொருள்கள் கணிசமான அளவு குறைவடைந்து சென்று வருகின்றது.

இந் நிலையில் வவுனியா விவசாயத் திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் சகீலா பானுவின்   ஊக்குவிப்புடன் இந்த வரட்சி காலத்திலும்  கிணற்று நீரைப் பயன்படுத்தி  வவுனியா மாவட்டத்தில் முதல் முறையாக 200 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டு விளைச்சல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் இருந்து வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 512 கிலோகிராம் பெரிய வெங்காய விதைகள் 720 விவசாயிகளுக்கு  பகிர்ந்தளிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வெங்காயப் பயிர்ச்செய்கை முறை தொடர்பிலான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இதன் காரணமாக  95 சதவீதமான விவசாயிகளிடமிருந்து சாதகமான விளைச்சல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெங்காயச் செய்கைக்காக வவுனியா பெரியமடு, ஓமந்தை, நெடுங்கேணி, செட்டிகுளம் போன்ற கிராமங்களில் வாழும் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு விதைகள், பயிற்சிகள் வழங்கி பெரிய வெங்காயச் செய்கையை ஊக்குவித்திருப்பதாகவும் அதற்கு சாதகமான விளைச்சல் கிடைத்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் சகிலா பானு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X