Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு - பெரியகுளம் பாடசாலையினை மீள இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பெரியகுளம் கிராம மக்கள் துணுக்காய் வலயக் கல்விப் பணிமனையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1984ஆம் ஆண்டு குறித்த கிராமத்தில், பாடசாலை இயங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆனால், பாடசாலை தனது பெயரில் வலயத்தில் இயங்குகின்ற பாடசாலையாகவே உள்ளது. இப்பாடசாலை தற்போது முத்தையன்கட்டுப் பகுதியில் பாடசாலை ஒன்றுடன் இணைந்து இயங்குகின்றது.
இப்பாடசாலையை தனது சொந்தக் கிராமத்தில் இயங்க வைக்க வேண்டும் என, கடந்த மாதம் 04ஆம் திகதியன்று ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், பெரியகுளம் கிராம மக்கள் பிரதிநிதிகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கூட்டத்தில் கலந்துகொண்ட துணுக்காய் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஒருவரால், பெரியகுளம் கிராம மக்கள் தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளும் இடத்தில், பெரியகுளம் பாடசாலை தனது சொந்த இடத்தில் இயங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் பெரியகுளம் கிராமத்தில் பாடசாலையினை இயங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago