2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெரும் போகத்துக்கான முதலாவது நீர் விநியோகம் ஆரம்பம்

Niroshini   / 2021 ஒக்டோபர் 26 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், 2021, 2022ஆம் ஆண்டுக்கான பெரும்போக பயிர்ச்செய்கைக்கான முதலாவது நீர் விநியோகம், இன்று (26) காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில், பெரும் போகத்துக்காக 31,339 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே, முதலாவது நீர் விநியோகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாணத்தில், 2ஆவது பெரியகுளமான முருகன் கட்டுக்கரைக் குளம், 11ஆம் கட்டைதுருசு பகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் நீர் திறந்து விடப்பட்டது.

இதன்போது, மன்னார் மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் என்.யோகராஜா, முருங்கன் கட்டுக்கரைக் குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பி. அருள் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்போது கட்டுக்கரைக் குளத்தில், 9 அடி நீர் காணப்படுகிறது. மேலும் கட்டுக்கரைக் குளத்துக்கு நீர்வரத்து காணப்படுகின்றது.

இந்த நிலையில், கடந்த 14ஆம் திகதியன்று, மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே, முதலாவது நீர் விநியோகமானது, இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .