2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பேசாலையில் டெங்கொழிப்பு சிரமதானம்

Niroshini   / 2021 டிசெம்பர் 12 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட் 

மன்னார் மாவட்டத்தில், அண்மைக்காலமாக பெய்து வந்த கடும் மழை அதனைத் தொடர்ந்து  ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல கிராமங்களில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், இன்றைய தினம் (12) காலை, பேசாலை பகுதியில், பாரிய சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

பேசாலை  பகுதியில், நேற்று (11) வரை 90க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு, மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நிலையிலேயே,   பேசாலை கிராம மக்கள், இன்று (12),  தமது கிராமங்களில், பாரிய சிரமதானப் பணியை முன்னெடுத்தனர்.

 கிராம மக்களுடன் கடற்படை, இராணுவத்தினர், கிராம அலுவலர்கள், சுகாதார தரப்பினர், மதத்தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X