2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘பொதுத் தேர்தலில் கூட்டமைப்புக்கு போராளிகள் ஆதரவு’

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

தமீழழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் இயங்கும் கட்சிகள், அமைப்புகள் என அனைத்தும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.

அத்துடன், “மக்களுடைய வாக்குகள் பிளவுபடாமல், கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக, வருகின்ற தேர்தலில் ஆதரவு வழங்குவதாக முன்னாள் போராளிகள் எமக்கு கூறியிருக்கின்றார்கள்” எனவும், மாவை கூறினார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் கட்சிக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையில், வவுனியாவில், இன்று (09) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .