2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; அரச உத்தியோகத்தர்களுக்குப் பிணை

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதான  வீதியில், ஞாயிற்றுக்கிழமை (23) இரவு வீதி சோதனை நடவடிக்கையில் நின்ற பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரண்டு அரச உத்தியோகத்தர்களும், தலா 1 இலட்சம் ரூபாய் சரீர பிணையில், நேற்று  (24) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நீதிமன்றில் பதில் நீதவான் பரஞ்சோதி முன்னிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இவ்விருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு விசாரணை,  ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முள்ளியவளை பிரதான  வீதியில், ஞாயிற்றுக்கிழமை (23) இரவு 7.30 மணியளவில்,  வீதி சோதனை நடவடிக்கையில் நின்ற பொலிஸார், வீதியால் சென்ற இவ்விருரையும் மறித்த போது, அவர்கள் சோதனை சாவடியில் நிக்காமல் சென்றுவிட்டு, சற்று தூரம் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர் 

இதையடுத்து, இவர்களது ஆவணங்களை பொலிஸார் சோதனை செய்தபோது, அவ்விருவரும், தாங்கள் கணவன் - மனைவி எனவும் மனைவி. கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் பணிபுரியம் கிராம அலுவலகர்  என்றும் கணவன், அதே பிரதேச செயலகத்தின் கீழ் பணிபுரியம் அரச உத்தியோகத்தர் என்றும் கூறி, பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இவர்களின் நடத்தையை காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தரின் இலைபேசியை அரச உத்தியோகத்தாரான கணவன் தட்டி பறிக்க முற்பட்டபோது, பொலிஸாரின் சீருடையில்  இருந்து பெயர் (அரசமுத்திரரை) சீருடையில் இருந்து  அகற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தக் குற்றச்சாட்டில், இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .