2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் சட்டவிரோத மணல் அகழ்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 நவம்பர் 13 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்பட்டன.

அதேவேளை பயிர் செய்கை நிலங்கள் ஆற்றுப்படுக்கைகள் என்பவற்றில் இவ்வாறான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்து களஞ்சியப்படுத்தப்பட்ட பெருமளவான மணல்  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றக்கட்டளைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்;பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரும் ஏனைய பொலிஸாரும்; தொடர்ந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கை மூலம் கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .