Niroshini / 2021 ஜூன் 23 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - சிதம்பரபுரம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 2 பொலிஸ் காவலரண்களும், பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக, நாடு முழுவதும் 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படுமென்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர் தெரிவித்திருந்தார்.
இதற்கமைவாக, வவுனியாவில் சிதம்பரபுரம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2 பொலிஸ் காவலரண்களையும், இவ்வாறு புதிய பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வவுனியா தலைமை பொலிஸ் நிலையங்களில் இணைப்பு செய்யப்பட்டிருந்த குறித்த இரு பொலிஸ் காவலரண்களும், தனியான பொலிஸ் நிலையங்களுக்குரிய உட்கட்டமைப்புகளை உள்ளடக்கி, புதிய பொலிஸ் நிலையங்களாக அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், மிக விரைவில் அவை திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .