Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 ஜூன் 27 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு பொலிஸ் பிரிவில் உள்ள மடு 2ஆம் கட்டை பகுதியில் ஆராதனையை முடித்துக் கொண்டு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிறிஸ்தவ மத போதகர் ஆமோஸ் என்பவரின் மோட்டார் சைக்கிளை இடை மறித்த நபர்கள் அவர்களிடம் இருந்த பெறுமதியான பொருட்களை கத்தி முனையில் பறித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-இச்சம்பவம் குறித்து கிறிஸ்தவ மத போதகர் ஆமோஸ் மேலும் தெரிவிக்கையில்,,,
மடு 2ஆம் கட்டை பகுதியில் திங்கட்கிழமை(26) , மாலை நேர ஆராதனை முடித்துக் கொண்டு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டிருந்தார்.
மடு சின்னப்பண்டிவிருச்சான் பகுதியூடாக பெரிய பண்டிவிரிச்சான் நோக்கி வருகை தந்து அங்கிருந்து தம்பனை நோக்கி சென்று கொண்டிருந்த போது தம்பனை காட்டுப்பகுதியில் உள்ள வீதி வளைவில் வைத்து இரண்டு இளைஞர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டிக்கொண்டு வாள்களுடன், மோட்டார் சைக்கிளை இடை மறித்து பாய்ந்தனர்.
இதன் போது நாங்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தோம்.இதன் போது எனது மனைவிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக குறித்த இருவரும் மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து எங்களிடம் இருக்கின்ற கையடக்க தொலைபேசி,பேஸ்,பை,மற்றும் நகைகளை தருமாறு கோரினார்கள்.
அச்சத்தின் காரணமாக அவர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்து விட்டேன்.
அவற்றை எல்லாம் பறித்துக் கொண்டு அவர்கள் காட்டுக்குள் பாய்ந்து சென்று விட்டார்கள்.
சம்பவம் இடம்பெற்ற போது அவ்விடத்தில் வேறு யாரும் வரவில்லை. சற்று தொலைவில் சென்ற போது வீதியில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.
பின்னர் மக்களிடமும் ஏனையவர்களிடமும் குறித்த சம்பவத்தை தெரிவித்ததாக போதகர் ஆமோஸ் தெரிவித்தார்.
21 minute ago
39 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
43 minute ago