2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலை திறந்துவைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாக கொண்டு எயிட்ஸ் சயரோகம் மலேரியா நோய்களை  அழித்தொழிப்பதற்கான கருத்திட்ட உலக நிதியத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தொகுதி இன்று (19) மாலை 3.30க்கு உத்தியோகபுர்வமாக திறந்துவைக்கப்பட்டது

கட்டடத்துக்கான கல்வெட்டினை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் திறந்துவைக்க கட்டிடத்தினை  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா திறந்து வைத்தார்  
இந்நிகழ்வில், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் க.சிவநேசன் மற்றும் கமலேஸ்வரன் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .