2025 ஜூலை 05, சனிக்கிழமை

மாடுகள் குறுக்கிட்டதால் விபத்து: மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா காயம்

George   / 2016 ஜூன் 23 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

யாழ்ப்பாணம் - மன்னார் பிரதான வீதியின் இலுப்பைக்கடவை பகுதியில் செவ்வாய்க்கிழமை (21) இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில், மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த நீதவானின் வாகனம்,  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை வீதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது, வீதிக்கு குறுக்காக மாடுகள் சென்றதாலேயே விபத்து சம்பவித்துள்ளது. 

இதன்போது காயமடைந்த நீதவானை, உடனடியாக இலுப்பைக்கடவை பொலிஸார் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். தற்போது மன்னார் நீதவான், மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும், நீதவானின் பாதுகாப்புக்காகச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .