2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மோட்டர்சைக்கிளில் ஒரு பக்கமாக இருந்து பயணிக்க தடை

Niroshini   / 2016 ஜூன் 02 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் மோட்டர்சைக்கிளில்  ஒருபக்கமாக  இருந்து  பயணிக்க  தடைவிதிக்கப்ட்டுள்ளதாக    கிளிநொச்சி  பொலிஸார்  தெரிவித்தனர். 

மோட்டர்  சைக்கிளில் பின்னால் இருந்து  பயணிப்போர்   இரண்டு பக்கங்களும்  கால்களை  வைத்தவாறே  பயணிக்க வேண்டும். மோட்டர்சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிப்பதால்  பின்னால்  இருந்து  பயணிப்பவர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விழுவதற்கு நேர்ந்தால் வாகன சாரதியும் வாகனமும்  விழுவதற்கான  சந்தர்ப்பங்கள் உள்ளன.

இதனால் பல விபத்துக்கள்  நடைபெறுவதாகவும் போக்குவரத்து சட்டத்தின் பிரகாரம் இக்குற்றத்துக்கு பொலிஸாரால் தண்டப்பணம்  அறவிட  முடியாது. இக் குற்றங்கள்  நீதிமன்றத்திற்கே  அனுப்பப்படும்.

எனவே, அனைவருக்கும்  முதல்  தடவை மன்னிப்பு வழங்குவதாகவும் மீண்டும் இவ்வாறு  நடக்கும்  பட்சத்தில்  நீதிமன்றத்துக்கு குற்றம் அனுப்பப்படும் என சாரத்திகளுக்கு கிளிநொச்சி  போக்குவரத்துப்பிரிவு  பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .