Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பகுதியில் முதியவர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்ற ஐந்து பேருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 1 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்டவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நட்டஈடும் செலுத்துமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா வெள்ளிக்கிழமை (09) உத்தரவிட்டார்.
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி முதியவர் ஒருவரின் வீட்டையும் அதன் காணியையும் இராணுவத்திடமிருந்து பெற்றுத்தருவதாகவும் அதற்காக ஒருதொகை பணத்தை கப்பமாக குறித்த முதியவரிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் எனக் கூறிக் கொண்ட குறித்த 05 பேரும் பணத்தை பெற்றுக்கொள்ள முற்பட்டபோது கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வழக்கு இடம்பெற்று வந்த நிலையில், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் வெள்ளிக்கிழமை (09) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட ஐந்து பேருக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட நபருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago