2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

முதலமைச்சர் - உறவினர்கள் சந்திப்பு

George   / 2017 மார்ச் 28 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண கல்விஅமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண உறுப்பினர்களான அனந்தி சசிதரன், து.ரவிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படவேண்டும் என தெரிவித்து, 37 கிளிநொச்சி, கந்தசாமி கோவில் முன்பாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 37ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அதேவேளை, மருதங்கேணியில் 13 ஆவது நாளாக எவ்வித தீர்வுகளும் இன்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .