Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 06 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என்.நிபோஜன், சண்முகம் தவசீலன், நடராசா கிருஸ்ணகுமார்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்தத்தில் தமது பிள்ளைகளை இழந்த குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள் ஆகியவற்றுக்கு உதவித் தொகை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடலொன்று, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்றது.
மேற்படி குடும்பங்களின் வாழ்வாதார நிலையைக் கட்டியெழுப்பும் வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் திட்டத்துக்கு அமைவாகவே, இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடந்த ஆண்டில், இவ்வமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டில், வடக்கு கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 43 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கிணங்க, 12,494 குடும்பங்கள், நிதியுதவி பெறுவதற்காகப் பதிவுகளை மேற்கொண்டன. இவற்றில், விசேட தேவை உடையவர்கள் என்னும் அடிப்படையில், 5 மாவட்டங்களிலுமிருந்து தெரிவுகள் இடம்பெற்ற நிலையில், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 860 குடும்பங்களுக்கும் சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் 125 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது.
மீதமாக உள்ள குடும்பங்களுக்கும், இவ்வருடத்தில் பதிவுகளை மேற்கொண்டவர்களுக்குமாக, இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு மொத்தமாக 500 குடும்பங்களுக்கு, தலா ஐம்பது ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பிலேயே, இன்றைய தினம் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன், முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago