2025 ஜூலை 05, சனிக்கிழமை

மூன்று நாட்களில் 12 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன

Thipaan   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கண்டாவளை, தட்டுவன்கொட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 12 வாகனங்கள் புதன்கிழமை (16) முதல் வெள்ளிக்கிழமை (18)  வரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி கண்டாவளை, தட்டுவன் கொட்டி,  ஆனையிறவு உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட எட்டு டிப்பர் வாகனங்கள் மற்றும் நான்கு உழவு இயந்திரங்கள் என்பன கடந்த புதன்கிழமை (16) முதல் வெள்ளிக்கிழமை (18) வரையான காலப்பகுதியில் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு குறித்த வாகனங்களுக்கும் அதன் சாரதிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் குறித்த வாகனங்களை திங்கட்கிழமை (21) நீதிமன்றுக்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .