Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 ஜூன் 30 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார், பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று புதன்கிழமை (29) அதிகாலை உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி நேற்று புதன்கிழமை இரவு மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடத்தப்பட்டு காணாமல் போனவர் மன்னார் பள்ளிமுனை தெற்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ்.அன்ரன் டெனி (வயது 38) எனத் தெரியவந்தள்ளது.
குறித்த குடும்பஸ்தர், உயிலங்குளம் சென் பீற்றர் ஆலய பங்குப் பணிமனையில் கடமையாற்றி வந்த நிலையில் நேற்று அதிகாலை 2.30க்கு ஆலய பங்குப் பணிமனையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தரை புலனாய்வுத்துறையினர் என தங்களை அறிமுகப்படுத்திய சிலர் அண்மைக்காலமாக மன்னார் பள்ளிமுனையிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தல்களை விடுத்து வந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி மீண்டும் புலனாய்வுத்துறையினர் என தம்மை அறிமுகப்படுத்திய சிலர் காணாமல் போன குடும்பஸ்தரின் வீட்டிற்குச் சென்று அவர் தொடர்பில் விசாரித்துள்ளனர்.
குறித்த நபர், வீட்டில் இல்லாத நிலையில் 19ஆம் திகதி மீண்டும் வருவோம் என கூறிச் சென்றுள்ளர்.
இது தொடர்பில் கடத்தப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையிலே குறித்த குடும்பஸ்தர் நேற்று புதன்கிழமை அதிகாலை ஆலய பங்குப் பணிமனையில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
05 Jul 2025