Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
“இரணைமடுவில் வசிக்கின்ற மீனவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
கிளிநொச்சி - சாந்தபுரம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை குளத்தை அண்டிய கிராம அபிவிருத்தி எனும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்துகொண்டார்.
நிகழ்வின் இறுதியில் 2017ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் கிளிநொச்சி இரணைமடுகுளம் 5,200 மில்லியன் ரூபாய்க்கள் செலவில் அபிவிருத்திச் செய்யப்பட்டுவருகிறது.
இரணைமடுகுளத்தை முழுமையாக நம்பி தங்களது வாழ்க்கையை கொண்டு சென்ற சுமார் 300 வரையான இரணைமடுகுள நன்னீர் மீன்பிடி தொழில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இரணைமடுகுள அபிவிருத்தி திட்டத்தில் முழுமையாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இந் நன்னீர் மீன்பிடி தொழில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு எவ்வித நிவாரண ஏற்பாடுகளும் காணப்படவில்லை. இது சம்பந்தமாக உங்களது கருத்து என்ன என ஊடகவியலாளர்களினால் தொடுக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடனே உத்தரவாதம் அளிக்கக் கூடியவாறு இல்லை. இரணைமடுவில் வசிக்கின்ற இவ் மீனவக்குடும்பங்களில் விவசாய வேலைகளை செய்பவர்களும் இருக்கிறார்கள். இதில் மீன்பிடியை மட்டும் பிரதான தொழிலாக செய்துவருபவர்களின் விபரங்களைத் திரட்டி அவர்களுக்கான வாழ்வாதார உதவியினை செய்வதற்கு பார்க்கின்றோம் என்றார்.
மேலும், அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைதுசெய்து விடுவித்துக் கொண்டுள்ளோம். அவர்களை எங்கு தடுத்துவைக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அவர்களுடைய படகுகள் மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை அரச உடமையாக்கி உள்ளோம். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
தெற்கிலும் இனவாதம் காணப்படுகிறது. அவ்வாறே வடக்கிலும் சிலரால் இனவாதம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறன. இது சமாதானத்துக்கு எதிரானது. மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்தலாம் இனவாதம் சமாதானத்திற்கு விரோதமானது, இந்தக் கருத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும் யுத்தத்ததை எவரும் விரும்புவது கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago