2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மாபெரும் முத்தமிழ் விழா

Niroshini   / 2016 மே 29 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி குறோஸ் கலாசார பேரவை ஏற்பாடுசெய்த, மாபெரும் முத்தமிழ் விழா சனிக்கிழமை (28)ஆரம்பமானது.

வைத்தியசாலைசந்தியிலிருந்து மாவீரன் பண்டாரவன்னியனின் உருவம் தாங்கிய ஊர்தியுடன் பல்வேறு கலை, பாரம்பரிய அம்சங்களுடனும் ஆரம்பமாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லுரி மைதானம் வரை பாரம்பரிய கலாசார பேரணி இடம்பெற்றது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக, பிரபல திரைப்பட நடிகரும்; தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவரும் பாரம்பரிய நாட்டுக்கூத்து கலைஞருமான நாசர், தென்னிந்திய குணச்சித்திர நடிகரும் நிகழ் நாடக மன்ற கூத்துபட்டடை நிறுவுனருமான மு.சண்முகராசா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .