2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மேய்ச்சல் தரவைகளுக்கு அனுமதி வேண்டும்

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் அடையாளப்;படுத்தப்பட்டுள்ளன. அனுமதி கிடைக்குமிடத்து மேய்ச்சல் தரவைகள் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முல்லைத்தீவு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது காலபோக பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், திறந்தவெளி வளர்ப்;பு முறையில் ஈடுபடும் கால்நடைப் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளை பராமரிப்;பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமது கால்நடைகளை பராமரிக்கக்கூடிய மேய்ச்சல் தரவைகளை அமைத்து தருமாறு பண்ணையாளர்கள் கடந்த ஆறு வருடங்களாக கோரிக்கைகளை விடுத்து வருகின்ற நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லை என்பது அனைத்து இடங்களிலுமுள்ள பிரச்சினையாகும். மேய்ச்சல் தரவைக்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணிகள் வனவளத் திணைக்களத்திற்குரிய காணியாக காணப்படுகின்றன.

அனுமதிகளைப் பெற்றுக்கொண்டால், அதன் பிறகு அப்பிரதேசத்தை மேய்ச்சல் தரவைகளாக மாற்றக்கூடியதாக இருக்கும். அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

கால்நடை அபிவிருத்தி திணைக்களம் சில இடங்களை அடையாளப்படுத்தியுள்ளது. அடையாளப்படுத்தப்பட்ட இடங்கள் தொடர்பான சிபார்சுகளை வனவள திணைக்களத்துக்கு வழங்கியுள்ளோம்.

அதுமட்டுமல்லாது காடு அழிப்பது தொடர்பாக தேசிய மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள குழு ஒன்றுள்ளது. அந்தக் குழுவும், இதற்கான அனுமதியை வழங்கவேண்டும். அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்;பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .